08-01-2018-மார்கழி 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கு ஏல் ஓர் எம்பாவாய்
இன்றைய நைவேத்யம் - பல (மல்டி) அவல் மாங்காய் பொங்கல்
09-01-2018-மார்கழி 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
இன்றைய நைவேத்யம் - நவதான்ய பொங்கல்
தொட்டுக்கொள்ள கொத்துமல்லி சட்னி
 |
நவதான்ய பொங்கல் |
 |
கொத்துமல்லி சட்னி
10-01-2018-மார்கழி 26
மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்
இன்றைய நைவேத்யம் - ரவா காய்கறிப் பொங்கல்
11-01-2018-மார்கழி 27
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம் நாடு புகளும் பரிசினால் நன்றாக சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
இன்று கூடாரைவல்லி கண்ணனுக்கு தினை ஆப்பிள் இனிப்பு பொங்கல்
12-01-2018-மார்கழி 28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம் அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்
இன்று ஏகாதசி - எனவே பெருமாளுக்கு கோதுமை ரவா குங்குமப்பூ பொங்கல்
13-01-2018-மார்கழி 29
சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்! பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்
இன்று போகிப் பண்டிகை
விசேஷ நைவேத்தியங்கள்
போளி வடை தேங்காய்ப் பாயசம் பயறு தேங்காய்ப்பால் பொங்கல்
14-01-2018-தை - 1
இன்று தை மாதம் ஆரம்பம் ஆனால் தை மாதம் மாலை
4:30 மணிக்கு மேல் பிறப்பதால் மார்கழி காலையில்
இருப்பதால் கோலம் பூஜை நைவேத்யம் ஆகியவை உண்டு
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
இன்று பொங்கல் திருநாள்
பொங்கல் வாழ்த்துக்கள்
வடை வெண்பொங்கல் சர்க்கரைப் பொங்கல்
|